Skip to main content

விடுதலை நாயகன் வெற்றியை தருகிறார் எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்


விடுதலை நாயகன் வெற்றியை தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்

நான் பாடி பாடி மகிழ்வேன் - தினம்
ஆடி ஆடி துதிப்பேன்
எங்கும் ஓடி ஓடி சொல்லுவேன் - 2
என் இயேசு ஜீவிக்கிறார் - விடுதலை

அவர் தேடி ஓடி வந்தார்
என்னை தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார் - 2
புது மனிதனாக மாற்றினார் - விடுதலை

அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வலிமை வெல்ல - 2
அதிகாரம் எனக்குத் தந்தார் - விடுதலை

செங்கடலை கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன் - 2
எக்காளம் ஊதி ஜெபிப்பேன் - விடுதலை