வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா
அனுபல்லவி
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
மாமிசமான யாவர் மீதும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்கதரிசனம் சொல்வாரே - வல்லமை
பெந்தெ கொஸ்தே நாளைப் போல
பெரிதான முழக்கத்தோடு
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் - வல்லமை
மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியை தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்திர சுவீகாரம் ஈந்திடும் - வல்லமை