விசுவாசமே நம் ஜெயமே விலை மதியாதோர் நல் பொக்கிஷமே
விலை மதியாதோர் நல் பொக்கிஷமே
அனுபல்லவி
விசுவாசமாம் கேடகம் தாங்கி
விசுவாசப் பாதையில் முன்னேறுவோம்
மலை போன்ற துன்பங்கள் பெருகிடினும்
மலையாதே யாவும் அகன்றிடுமே
வியாதி வருத்தம் போராட்டம் வந்தும்
விசுவாசத்தால் நாமும் ஜெயமடைவோம் - விசு
எரிகோவின் மதில்கள் தகர்ந்திடவே
ஏகிச்சென்றான் பக்தன் யோசுவாவும்
விசுவாசத்தாலே முன்னேறியே நாம்
வல்லவர் பெலத்தால் பென்றிடுவோம் - விசு
விசுவாசம் காத்திட தம் ஜீவனை
விசுவாச வீரர்கள் இழந்தனரே
நல்ல போராட்டம் போராடியே நாம்
விசுவாசத்தை என்றும் காத்துக் கொள்வோம் - விசு
விசுவாச நம்பிக்கை அறிக்கையிலும்
திடமான மனதுடன் நிலைத்திருப்போம்
வாக்கு மாறாத கர்த்தரை நிதமும்
விசுவாசத்தோடு நாம் பின் செல்லுவோம் - விசு
பாவங்கள் பாரங்கள் அகற்றியே நாம்
பரிசுத்தர் சிந்தையை அணிந்திடுவோம்
இயேசுவை நோக்கி சீராக ஓடி
விசுவாச ஓட்டத்தை முடித்திடுவோம் - விசு