Skip to main content

வருகின்றாரே இயேசு வருகின்றாரே நியாதிபதியாக கடைசி நாட்களிலே


வருகின்றாரே இயேசு வருகின்றாரே
நியாதிபதியாக கடைசி நாட்களிலே
மகிமையில் வாழ்ந்திடவே
பரிசுத்தம் அடைந்திடுவாய்

அழிவின் நாளுக்கு அஞ்சிடாயோ
அழியும் உலகையும் நம்பிடாதே
இருதயக் கடினம் சடுதியில் hநசம்
இயேசுவண்டை வாராயோ - வருகின்றாரே

கல்லறைகள் ஆயத்தமே
பரிசுத்தர் பறந்திட ஆயத்தமே
ஒலிவ மலையும் ஆயத்தமே
இயேசுவண்டை வாராயோ - வருகின்றாரே

வருகையில் அவர் முகம் தரிசித்திட
விசவாசியே நீயும் ஆயத்தமா?
கிருபையின் வாசல் அடைபடுமுன்
கிறிஸ்துவை தரித்திடுவாய் - வருகின்றாரே