வருகின்றார் இயேசு சீக்கிரமாய் மேகங்கள் மீதினில் வந்திடுவார்
மேகங்கள் மீதினில் வந்திடுவார்
அனுபல்லவி
நினையாத நேரத்திலே
நடு வானில் தோன்றிடுவார்
கர்த்தரின் நாள் சமீபம்
ஆயத்தமாகிடுவோம்
ஆயிரம் ஆயிரமாய்
தூதரோடே வந்திடுவார் - வருகின்றார்
கற்புள்ள கன்னிகையாய்
தீபத்தில் எண்ணெயுடன்
விருந்து சாலைக்குள்ளே
மணவாளனோடே செல்வோம் - வருகின்றார்
எக்காளம் தொனிக்கையில்
மரித்த பரிசுத்தர்கள்
எழும்பிட நாமும்
மறுரூப மாகிடுவோம் - வருகின்றார்
இன்று இயேசு இரட்சகர்
நாளை நியாயாதிபதி
நீதியாய் நியாயந்தீர்க்க
ராஜாதி ராஜன் வாரார் - வருகின்றார்