வென்றனரே நம் இயேசு பரன் என்றென்றும் ஜெயித்தெழுந்தார்
என்றென்றும் ஜெயித்தெழுந்தார்
ஜெயமே அடைந்துமே
இரட்சகரில் வளருவோம்
சேதமேதும் நெருங்கிடா
தேவ தேவன் தாங்குவார்
துன்பம் யாவும் நீங்கிடும்
இன்பம் என்றும் தங்கிடும் - வென்
தீங்கு நாளில் மறைத்துமே
சுகமாய்க் காத்து மூடுவார்
தகுந்த வேளை கரத்தினில்
உயர்த்தி ஜெயமே நல்குவார் - வென்
தேவனோடு செல்லுவேன்
மதிலைத் தாண்டி பாயுவேன்
உலகை ஜெயிக்கும் தேவனால்
யாவும் ஜெயித்து செல்லுவேன் - வென்