Skip to main content

வாழுவேன் அன்பர் நாடதில் ஆர்ப்பரிப்புடன் வாஞ்சையுடன் காத்த எந்தன் ஆவல் தீர்த்திட்டார்


வாழுவேன் அன்பர் நாடதில் ஆர்ப்பரிப்புடன்
வாஞ்சையுடன் காத்த எந்தன் ஆவல் தீர்த்திட்டார்
வாழுவேன் இன்ப நாடதில்

என்ன இம் மேன்மை! என் பேர்க்காய்த் தானோ
என்னென் இன்பம் என் சொந்தமானதோ
ஏற்றுவேன் என் உள்ளமதினால் ஶி துதி
என்றும் என்னை மீட்ட அன்பைக் கூறுவேன் நிதம் - வாழு

அன்பின் மகிமை அன்பே நான் காண
அன்பே உம் சாயல் என்னில் தரித்தீரே
ஆனந்தத்தால் சாற்றிடுவேன் நான் - துதி
அன்பே உள்ளமதில் பொங்கிச் சாடுதே எனில் - வாழு

கைவேலையில்லா கனமான வீடே
கைவசமாக்க அருள் என்னிலீந்தீரே
காதலா நின் நன்றி கூறுவேன் - தினம்
காலா காலங்கiளாய்ப் பாடிடுவேன் நான் - துதி - வாழு

நின் கிருபை தேவா என்றென்றுமாக
இவ்வேளை காண இதயந்திறந்தீரே
இன்பமாகப் போற்றிடுவேன் நான் - இனி
இன்னோர் அண்ணலெனக்கெங்குமில்லையே வேறு - வாழு

உன் ரூபம் தானே என் பிரியம் தேவே
உம்மோடு சேர என் நெஞ்சு பொங்குதே
உன்னதா உம் மேன்மை எத்தனை ஶி மகா
ஊற்றுவேன் நிதம் உள்ளமதை நான் - நிதம் - வாழு