விண் மகிமை கண்முன் கண்டேன் விண் மன்னன் ஏசென்னை அழைக்கிறார்
விண் மன்னன் ஏசென்னை அழைக்கிறார்
அனுபல்லவி
மண்ணுலகின்பங்கள் மாயையல்லோ
வீணானதே மாறிடுதே
விண் ஜீவ கிரீடமோ என் சொந்தமே
மரண யோர்தான் புரண்டு வந்தால்
மாலுமி ஏசுவின் கப்பல் ஏறி
அக்கரையோரம் நான் சென்றிடுவேன்
அங்கே வரவேற்புக் காத்திருக்கும் - விண்
பரதீசிலே பல காட்சிகள்
பார்த்துப் பரவசம் பொங்கிடுமே
கண்ணீர் கவலையும் அங்கில்லையே
கர்த்தரின் மார்பினில் சாய்ந்திடுவேன் - விண்
ஜீவ ஜல நதி ஓடிடும்
ஜீவ தண்ணீரால் என் தாகம் தீரும்
கர்த்தரின் கை கோர்த்து நடந்திட
காத்து தவிக்கின்ற தென்னுள்ளமே - விண்
புதிய கனி புசித்திடுவேன்
பூக்கள் நடுவே உலாவிடுவேன்
துதர்கள் பக்தர்களோடு வாழும்
தூய பேரின்பத்தை நாடுகின்றேன் - விண்
நல்ல சுகம் ஆரோக்கியமும்
நல்லாசீர்வாதங்கள் அங்கே உண்டே
தேவ சமூக இளைப்பாறுதல்
தேவை அதை கண்டடைவேன் - விண்
எத்தனையோ பிரதி பலன்கள்
உத்தம ஊழியர் பெற்றிடவே
ஓட்டம் ஜெயத்தோடு முடிந்திடும்
ஒன்றே எனதாவல் இயேசு போதும் - விண்