Skip to main content

வழி நடத்தும் வல்ல தேவன் வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே - நம் தாழ்வில் நாயகனே


வழி நடத்தும் வல்ல தேவன் வாழ்வில் நாயகனே
வாழ்வில் நாயகனே - நம் தாழ்வில் நாயகனே

பரதேசப் பிரயாணிகளே நாம் வாழும் பாரினிலே
பரமானந்தத்தோடே செல்வோம்
பரமன் நாட்டினிற்கே - இயேசு
பரன் தம் வீட்டினிற்கே - வழி

போகும் வழியை காட்டி நல்ல போதனை செய்வார்
ஏகும் சுத்தர் மீது கண்கள்
இருத்தி நடத்துவார் - இயேசு
திருத்தி நடத்துவார் - வழி

அந்தகார சக்திகள் எம்மை அணுகிடாமலே
சொந்தமான தம் ஜனத்தை
சூழ்ந்து காப்பாரே - இயேசு
துணையாய் நிற்பாரே - வழி

வாதை நோய்கள் வன்துன்பங்கள் வருத்தியபோதும்
பாதையில் நாம் சோர்ந்திடாமல்
பலப்படுத்திடுவார் - இயேசு
திடப்படுத்திடுவார் - வழி

காடானாலும் மேடானாலும் கடந்து சென்றிடுவோம்
பாடானாலும் பாடிச் செல்வோம்
பரவசமுடனே - இயேசு
பரன்தான் நம்முடனே - வழி

அன்றன்றுள்ள தேவை தந்து ஆதரிப்பாரே
என்றென்றும் துதிகனமும்
மகிமையவர்க்கே - இயேசு
மகிபனாமவர்க்கே - வழி