வெற்றி எனக்கே என் ஜீவ பயணத்திலே இயேசுவே எந்தன் வழி
வெற்றி எனக்கே என் ஜீவ பயணத்திலே
இயேசுவே எந்தன் வழி
வேதமே எந்தன ் வெளிச்சம்
மரண பள்ளத்தாக்கினிலே
மருகியே நான் நடந்தாலும்
மரணத்தை ஜெயித்த இயேசு உண்டு
என்னுடன் நடந்து வருவார் - வெற்றி
துன்பப் புயலில் கோர காற்றில்
என் ஜீவ படகமிழ்ந்தாலும்
காற்றையும் கடலையும் அதட்டின தேவன்
எனக்காய் எழும்பி விடுவார் - வெற்றி
வியாதியின் தொல்லையில் நான் அமிழ்ந்தாலும்
வியாதியின் பரிகாரி உண்டு
காயத்தின் கரத்தால் காத்திட அணைப்பார்
நோயற்ற வாழ்வினை தருவார் - வெற்றி
சந்தேக காற்றில் நான் சிக்கினாலும்
வந்து என்னை இரட்சிப்பார் என் இயேசு
நிந்தைகள் சகித்த நீதியின் தேவன்
தந்தைபோல் தோளினில் சுமப்பார் - வெற்றி
வறுமையின் பிடியில் நான் தவித்தாலும்
அருமையாய் நடத்துவார் இயேசு
ஐந்தப்பம் இரு மீனை ஆசீர்வதித்தவர்
என்னையும் போஷித்து காப்பார் - வெற்றி