Skip to main content

வல்லமை அருள் நிறைவே வாரும் பின்மாரி பொழிந்திடுமே


வல்லமை அருள் நிறைவே வாரும்
பின்மாரி பொழிந்திடுமே
தேவ ஆவியே தாகம் தீருமே
வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே

புது எண்ணெய் அபிஷேகம்
புது பெலன் அளித்திடுமே
நவ மொழியால் துதித்திடவே
வல்லமை அளித்திடுமே - வல்லமை

சத்திய ஆவியே நீர்
நித்தமும் நடத்திடுமே
முத்திரையாய் அபிஷேகியும்
ஆவியின் அச்சாரமாய் - வல்லமை

அக்கினி அபிஷேகம்
நுகத்தினை முறித்திடுமே
சத்துருவை ஜெயித்திடவே
சத்துவம் அளித்திடுமே - வல்லமை

தூய நல் ஆவிதனை
துக்கமும் படுத்தாமல்
தூயவழி நடத்திடவே
பெலன் தந்து காத்திடுமே - வல்லமை