Skip to main content

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன் விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே ஶி 2


விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே ஶி 2
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை

தடுக்கும் பாவத் தளைகளில் விடுதலை
கெடுக்கும் தீய பழக்கத்தில் - விடுதலை - 2
என்ன சந்தோஷம் இந்த - விடுதலை - 2
எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம் (2) - விடுதலை

எரிக்கும் கோபப் பிடியினில் - விடுதலை
விதைக்கும் தீய பொறாமையில் - விடுதலை
அன்பர் இயேசுவே தந்த - விடுதலை
இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே - விடுதலை

அடுக்காய் பேசும் பொய்யினில் - விடுதலை
மிடுக்காய் வீசும் பெருமையில் - விடுதலை
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே - விடுதலை

மாறிட்ட எந்தன் உள்ளத்தில் விடுதலை
மாறிடா அன்பர் அமையாய் மாற்றிடுதே
என்ன சந்தோஷம் இந்த அடிமைக்கு
மீட்கும் அன்பை ருசித்திடவே ஆவலில்லையோ - விடுதலை