வார்த்தையிலே உண்மையுள்ளவர் வாக்கு என்றும் மாறிடாதவர்
வாக்கு என்றும் மாறிடாதவர்
கிருபையாலே வரங்கள் தருபவர்
ஆவியாலே நடத்துகின்றவர்
அவரில் சார்ந்து நானே என்று சொன்னார்
இருதயத்தை திறந்து வைப்பாயோ? - உன்னை
மீட்டுக்கொண்டாரே வாழ்வு தந்தாரே - உன்
ஜீவனை நீ கொடுக்கமாட்டாயோ?
நல்ல மேய்ப்பன் நானே என்று சொன்னார்
ஜீவ அப்பம் நானே என்று உரைத்தார்
மேய்ப்பன் சத்தம் கேட்கும் ஆடுபோல்
நேசரின் சத்தம் கேட்கமாட்டாயோ - அவரில்
எக்காளம் தூதர் ஊதும்போது
வானத்திலே இயேசு வருவாரே
அந்த சத்தம் கேட்டு நாமும்கூட
அவரோடு சேர்ந்துகொள்ளுவோம் - அவரில்
சோதனைகள் மேற்கொள்ளும்போது
சாத்தானை மிதித்துபோடுவாயே
துன்பம் எல்லாம் இன்பமாக மாறும்
இயேசுவை நீ ஏற்றுக் கொள்ளும்போது - அவரில்