Skip to main content

வல்ல தேவன் என்னோடிருப்பாரே வழுவாதென்னை காத்திடுவாரே


வல்ல தேவன் என்னோடிருப்பாரே
வழுவாதென்னை காத்திடுவாரே
அல்லேலூயா என்றார்ப்பரிப்பேனே
அல்லேலூயா என்றார்ப்பரிப்பேன்

பயப்படாதே என்று உரைத்தாரே
பாரின் எந்தனை மீட்டெடுத்தாரே
பேரைச்சொல்லி அழைத்திட்டாரே
பேரானந்தம் நான் சொந்தமானேன் - வல்ல

தண்ணீர்களை கடந்திடும் போதும்
தயங்காதே உன்னோடு இருப்பேன்
அக்கினியில் நடக்கும் போதும்
அதுன் பேரில் பற்றாதே என்றார் - வல்ல

இமைப்பொழுது என்னை கைவிட்டாலும்
இரக்கங்களால் சேர்த்துக் கொள்வாரே
நித்திய கிருபையுடன் இரங்கி
நித்தம் என்னை நடத்துவாரே - வல்ல

உறுதியாய் உம்மைப் பற்றிக் கொண்டால்
உண்மையாய் என்னைக் காக்துக் கொள்வீரே
கெஞ்சும் வேண்டுதல்கள் கேட்பீரே
தஞ்சம் வேறொருவருமில்லை - வல்ல

அறிவாரே நான் போகும் வழியை
அறிந்தென்னை சோதித்திடுவாரே
புடமிட்டு சுத்தம் செய்வாரே
பின்பு சுத்த பொன்னாய் மாறுவேன் - வல்ல

வருவேன் என்ற வாக்குப்படியே
வருவீரே என் யேசு மணாளா
அசைவில்லா அந்நாட்டை சேர
ஆவலாக காத்திருப்பேனே - வல்ல