Skip to main content

வானில் பறக்கும் பறவைகள் மதுர கீதம் பாடிடும்


வானில் பறக்கும் பறவைகள்
மதுர கீதம் பாடிடும்
காட்டில் மலரும் பூக்கள்
அவரின் நாமம் போற்றிடும்

சூரிய சந்திரனும் மகா நட்சத்திர கூட்டமும
ஆகாயத்தின் விரிவும் அவரின் கிரியைகள் வர்ணிக்கும் - வானில்

பொங்கும் கடல்களும் பெருங்காற்றின் இரைச்சலும்
அடங்கும் அவரின் வார்த்தைக்கு இயேசு நாமம் பெரியது - வானில்

பூமியின் பிரபுக்களே புவி ஆளும் மனிதரே
பெரியோர் முதல் பிள்ளைகளும் இயேசு நாமம் போற்றுவீர் - வானில்