வருஷத்தை உமது நன்மையால் முடிசூட்டுகிறீர் உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது - 2
உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது - 2
நீதிமான்களே கர்த்தருக்குள் களி கூறுங்கள் - 2
துதி செலுத்துவது செம்மையானவர்களுக்கு தகும் - 2
சுரமண்டலத்தினால் வீணையினால்
கர்த்தரை துதித்து பாடிடுவோம்
ஆனந்த கீதங்கள் வாத்தியமும் முழங்க
அவருக்கே புதுப்பாட்டை பாடிடுவோம் - நீதி
கர்த்தரின் வார்த்தை உத்தமமும்
உவரின் செய்கையெல்லாம் சத்தியமுமாய்
அவர் ஆலோசனை நித்திய காலமும்
தலைமுறை தலைமுறையாக நிற்கும் - நீதி
கர்த்தரே நமக்கு அடைக்கலமும்
நாம் நம்பியிருக்கும் கன்மலையுமாம்
நீரோ மாறாதவர் உமது ஆண்டுகள்
முடிந்து போகாமல் நிலைத்து நிற்கும் - நீதி