வாரும் ஐயா போதகரே வந்தெம்மிடம் தங்கியிரும்
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம்
ஒளிமங்கி இரளாச்சே
உத்தமனே வாரும் ஐயா
கழித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்யும்
நான் இருப்பேன் நடுவில் என்றார்
நாயகன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் தருவாய்
உந்தன் மனை திருச்சபையை
உலகமெங்கும் உயர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித்தாண்டருள்வாய்