விசுவாசத்தாலே நாமும் பிழைப்போம் பசுமை செழிப்புடன் வாழ்வோம்
விசுவாசத்தாலே நாமும் பிழைப்போம்
பசுமை செழிப்புடன் வாழ்வோம்
ஏசு தேவனை நம்பினோரே
ஆனுபல்லவி
விசுவாசம் எம்மில் கடுகவிருந்தால்
வீழ்த்திடுவோம மலையைக் கடலிலே
உலகை ஜெயித்திடுமே விசுவாசம்
உத்தம இதயத்தில் தங்கும் - விசுவாசத்தாலே
கர்த்தரைக் கண்டு விசுவாசிப்பதிலும்
காணாமல் நம்பினால் பாக்கியமே
தரிசித்தல்ல வசிக்கும் கர்த்தருக்குள்
தங்கி நம்மில் வசிக்கும் கர்த்தருக்குள்
பரிசுத்தாவியிலே மகிழ்ந்து நாம்
பூரண மகிமை அடைவோம் - விசுவாசத்தாலே
வீரர்களாக நின்றிடுவோமே
விசுவாச சோதனை நேர்ந்திடினும்
பொன்னைப் போல் நெருப்பில் புடமிட்ட போதும்
புகழ்ச்சி கனம் மகிமை கிடைக்குமே
பரமன் வெளிப்படும் நாளில் - விசுவாசத்தாலே
ஆபிரகாமில் விசுவாச மார்க்கம்
அந்த அடிச்சுவட்டில் நடப்போர்
வாழ்வினில் நீதி கிறிஸ்துவின் மூலம்
வாக்குத்தத்த ஆசீர்வாத நன்மைகள்
ஜெயத்தின் மேல் ஜெயங்கொண்டு பக்தர்கள்
சந்ததம் சுதந்தரிப்போம் - விசுவாசத்தாலே
தேவ குமாரன் வந்திடும் நாளில்
தூய விசுவாசத்தோடு பறப்போம்
மூலைக்கல் இயேசு திட அஸ்திபாரம்
மாளிகையாய் அவர் மேல் இணைந்து நாம்
பரம அழைப்புடனே சீயோனில்
பிதாவின் முகம் கண்டு வாழ்வோம் - விசுவாசத்தாலே