வானபராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே வந்து நின் திருகரத்தால் எம்மை ஆசிர்வதியுமையா
வந்து நின் திருகரத்தால் எம்மை ஆசிர்வதியுமையா
எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா - வான
பக்தரின் மறைவிடமே ஏழை மக்களின் அதிபதியே
பாதமே கூடும் பாலகர் எமக்கு பரிசுத்த மீயுமையா
வாக்கு மாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க - வான
கிருபாசனபதியே நின் கிருபையில் நிலைத்திடவே
கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையில் நின்றிடவே
நின் சக்தியோடு பக்தியில் நாம் பூரணராகிடவே - வான
தாய் என்னை மறந்தாலும் ஐயா நீர் மறவாதிருக்க
ஆவினால் எம் உள்ளமதினில் அக்கினி பற்றிடவே
யேகோவாவே எங்களின் ராஜா எழுந்து வாருமையா - வான
நினைத்திரா தின மதிலே எம் கர்த்தரே வருவீரே
ஆவி ஆத்மா சரீரம் முற்றும் மகிமையில் சேர்ந்திடவே
மாசில்லா பரிசுத்தராக மண் மீது துலங்கிடவே - வான
வாதை பிணிதீர எம் வாய்ந்த மருந்தே நீர்
பாவ சாபரோக முற்றும் மாறிடும் திருரத்தமே
கல்வாரி அன்பை பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே - வான