Skip to main content

வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமே வெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமே


வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமே
வெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமே
வயல்வெளி காடாக எண்ணப்படுமே
பின்மாரியில் ஆறுகளும் பாய்ந்தோடுமே

வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும்
காடு வெளி களித்து செழிக்கும்
லீபனோனின் மகிமை வருமே
கர்மேல் சாரோன் அழகு பெறுமே - வனாந்திரம்

தளர்ந்த கைகளை திடப்படுத்தி
தள்ளாடும் கால்களை பெலப்படுத்தி
திடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம்
பதில் அளிக்க தேவன் வருவார் -வனாந்திரம்

குருடர்களின் கண்கள் காணுமே
செவிடர்களின் செவிகள் கேட்குமே
முடவன் மானைப் போல துள்ளுவான்
ஊமையன் நாவும் பாடுமே - வனாந்திரம்

மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமே
நித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமே
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமே
ஆசீர்வாத மழைபொழியுமே - வனாந்திரம்