வாலிபரே வாலிபரே வாரீரோ வந்து தேவ வார்த்தைகளைக் கேளீரோ
வாலிபரே வாலிபரே வாரீரோ
வந்து தேவ வார்த்தைகளைக் கேளீரோ
அனுபல்லவி
காலம் கடக்குமுன் நாள்கள் பறக்குமுன்
பிரியமான நாட்களல்ல என்ற சொல்லுமுன்னும்
மனுஷனின் நாட்களெல்லாம் புல்லைப் போலவே
அவன் செய்திடும் வேலைகள் வருத்தமுள்ளதே
உலகமதின் நிறைவும் வாலிபமும் மாயைதான்
ஞானியின் வார்த்தைகளை மறந்துவிடாதே - வாலிபரே
ஆவி தந்த தேவனிடம் செல்லும் முன்னமே
ஆயத்தமாய் ஜீவ பாதையில் நடந்திடு
நியாயத்திலே வந்து நிற்கும் நாட்களுக்கு முன்னமே
ஞானியின் வார்த்தைகளை மறந்துவிடாதே - வாலிபரே
இருதயத்தின் சஞ்சலத்தை நீக்கி போட்டிடு
மாமிசத்தின் தீங்கையும் மாற்றி போட்டிடு
ஜீவ தேவ சாயலாய் மாறிவிடும் நாள்விரும்
ஜீவ தேவன் வார்த்தைகளை மறந்துவிடாதே - வாலிபரே