பல்லவி பரலோகமே என் சொந்தமே
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை - நான்
என்று காண்பேனோ
சரணங்கள்
வருத்தம் பசி தாகம்
மனத்துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்ணவர் பாதம் சேர்வேன் - பரலோகமே
சிலுவையில் அறையுண்டேன்
இனி நானல்ல இயேசுவே
அவரின் மகிமையே
எனது இலட்சியமே - பரலோகமே
இயேசு என் நம்பிக்கையாம்
இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன்
இயேசுவை பின்பற்றுவேன் - பரலோகமே
ஓட்டத்தை ஜெயமுடன்
நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில்
சோராது ஓடிடுவேன் - பரலோகமே
பரம சுகம் காண்பேன்
பரன் தேசம் அதில் சேர்வேன்
இரா பகல் இல்லையே
இரட்சகர் வெளிச்சமே - பரலோகமே
அழைப்பின் சத்தம் கேட்டு
நானும் ஆயத்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே
வாஞ்சையும் பெருகுதே - பரலோகமே
பளிங்கு நதியோரம்
சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள் பாடிட
தூயனை தரிசிப்பேன் - பரலோகமே