Skip to main content

புதிய கிருபை அளித்திடுமே அனுதின ஜீவியத்தில்


புதிய கிருபை அளித்திடுமே
அனுதின ஜீவியத்தில்
கிருபை மேல் கிருபை அருளிச்செய்து
கிருபையில் பூரணமாகச் செய்யும்

ஆத்துமமே என் முழு உள்ளமே
ஆண்டவரை நீ ஸ்தோத்தரிப்பாய்
தினம் அதிகாலையில் புது கிருபை
அளித்து நீர் வழி நடத்தும் - புதிய

கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்த
கிருபையின் பாத்திரமாக்கிடுமே
கிருபையினால் உள்ளம் ஸ்திரப்படவே
கிறிபைகள் ஈந்திடுமே - புதிய

சோதனை வியாதி நேரங்களில்
தாங்கிட உமது கிருபை தாரும்
கிருபையில் என்றும் பெலனடைந்து
கிறிஸ்துவில் வளரச் செய்யுமே - புதிய

சோர்ந்திடாமல் நல் சேவை செய்ய
கிருபையின் ஆவியை ஊற்றிடுமே
நல்ல போராட்டத்தைப் போராட
கிருபைகள் அளித்திடுமே - புதிய

பக்தியோடு நம் தேவனையே
பயத்துடனே நிதம் தொழுதிடுவோம்
அசைவில்லா ராஜ்ஜியம் அடைந்திடவே
கிருபையைக் காத்துக் கொள்வோம் - புதிய