Skip to main content

இது அதிசயமே எனக்கானந்தமே இன்ப பரலோகம் துறந்தெனக்காய்


இது அதிசயமே எனக்கானந்தமே
இன்ப பரலோகம் துறந்தெனக்காய்
இகத்தில் இயேசுவே மனுவாய் உதித்தார்

விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்
என்னையும் எண்ணிலே தம் மனதில்
தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து
தயாபரனாய்த் தோன்றினார் - தேவ - இது

மானிடர்மன இருள் நீக்கிடும் மெய்
மாப்ரபையோடிலங்கும் மகிபன்
மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்
தந்தாரே இயேசுவையே - எந்தன் - இது

சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே
சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்
நன்றியோடே நானும் பாடிடுவேன்
தற்பரன் இயேசுவையே - எந்தன் - இது

பறந்திடும் பறவைக்கும் கூடு உண்டே
பதுங்கிட நரிக்கும் ஓர், குழியுமுண்டே
இயேசுவுக்கோ தலை சாய்த்திடவோ
எங்குமோர் ஸ்தலமுமில்லை - பூவில்

சாந்தமும் தாழ்மையும் நீதியுமே
சிறப்புடன் விளங்கிடுதே அவரில்
இந்நுகமே எனக்கெந்நாளுமே
சொந்த மென்றேற்றிடுவேன் என்றும் - இது