Skip to main content

இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன் பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லை


இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்
பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லை

கூடார மீதில் இறங்கிய மேகம்
தேவாலயத்தை நிரப்பிய மகிமை
மேல் வீட்டில் வந்ததோர் பலத்த அக்கினி
கூடி வந்தோரை நிறைத்த ஆவி
தேவன் தமது சபையைக் கட்டுகிறார் - இந்த

ஆவியின் வல்லமை அனைவரில்
ஜீவன் பெற்ற கற்களாய் எழும்ப
கட்டுவார் சபையை மாளிகையாக
மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேலே - இந்த

அக்கினி ஆவியில் எழும்பும் வரங்கள்
சத்திய சபைக்குத் தருவார் தேவன்
அற்புதம் வெளிப்படும் அப்போஸ்தலரால்
கர்த்தர் இயேசுவின் கிருபையில் நிறைந்தே - இந்த

கிறிஸ்துவின் நிறைவில் வளர்ச்சி பெறவே
சபையில் சீர் பெறும் பரிசுத்தவான்கள்
பக்தி விருத்தி அடைவதே பாக்கியம்
பரம தேவனின் தாசர்களாரே - இந்த

தேவனின் தானங்கள் ஒன்று சேர்ந்திடவே
தேவாதி தேவனின் மகிமையைக் காண
உத்தம ஈவால் உயருமே ஊழியம்
சித்தமே செய்வார் சிறந்தவராக்கி - இந்த

கிறிஸ்துவுக்காக பாடுகள் சகித்தால்
கிறிஸ்துவினாலே ஆறுதல் அடைவோம்
உபத்திரவப் பாதையில் உத்தம இராஜ்யம்
உவந்தே செல்வோம் மகிமையில் சேர - இந்த

பலவித சோதனை பாங்குடன் வந்தும்
பரவசம் கொள்வோம் பாடி ஜெபிப்போம்
ஆவியின் பெலத்தால் சாத்தானை அழிப்போம்
ஜெயித்தே செல்வோம் ஜெயவீரராய் நாம் - இந்த