இன்பமிதே பேரின்பமிதே இயே நாமம் இன்பமிதே
இயே நாமம் இன்பமிதே
இன்பமிதே நல் இன்பமிதே
இயேசு நாமமே
பாவம் போக்க வந்த நாமம்
இயேசு நாமமே
வாதை போக்க வந்த நாமம்
இயேசுவின் நாமமே - இன்பமிதே
நேற்றும் இன்றும் மாறா நாமம்
இயேசு நாமமே
தேனிலும் இனிய நாமம்
இயேசுவின் நாமமே - இன்பமிதே
ஜீவப் பாதை காட்டும் நாமம்
இயேசு நாமமே
ஜீவன் பெலன் தந்த நாமம்
இயேசுவின் நாமமே - இன்பமிதே
சாவு பயங்கள் நீங்கும் நாமம்
இயேசு நாமமே
சாபம் ரோகம் நீக்கும் நாமம்
இயேசுவின் நாமமே - இன்பமிதே
தேவராஜ்யம் சோக்கும் நாமம்
இயேசு நாமமே
தேவ நீதி நிறைந்த நாமம்
இயேசுவின் நாமமே - இன்பமிதே