Skip to main content

இறுதி இராப்போஜன விருந்திலே இரட்சகர் வீற்றிருந்தார்


இறுதி இராப்போஜன விருந்திலே
இரட்சகர் வீற்றிருந்தார்
இயேசு பன்னிறு சீஷருடன்

அப்பமதை எடுத்தவர்
ஆசீர் வதித்ததை பிட்டுத் தந்தார்
எந்தன் சரீரம் இதுவே புசிப்பீர்
என்றே பரிமாறினார் -இறுதி

பாத்திரத்தில் நவரசம்
பாவத்தைக் கழுவின தூய இரத்தம்
இரட்சண்ய புது உடன்படிக்கையை
இதைப் பானம் பண்ணினர் - இறுதி

அரையிலே சீலை கட்டி
அன்பரின் பாதங்கள் கழுவினார்
மாதிரியாகக் காண்பித்த தியாகம்
மாறாமல் பின் பற்றுவோம் - இறுதி

மூழ்கினவன் பாதங்களை
மீண்டுமாய் கழுவியே சுத்தஞ்செய்தார்
ஆயத்தமில்லா அவிசுவாசிகள்
அன்பின் விருந்தில் இல்லை - இறுதி

அன்பின் சீஷன் ஆறுதலாய்
அண்ணலின் மார்பினில் சாய்ந்திருந்தான்
துரோகியாம் யூதாÞ துணிக்கையும் வாங்கி
தீவிரம் போய் மறைந்தான் - இறுதி

சரீரமாம் சபையிலே
சத்திய ஆவியால் இணைத்தாரே
நன்றியும் பொங்க நிலைத்து நின்றாலோ
நற்கருணை ஈகுவார் - இறுதி

கபடற்ற மனதுடன்
கிறிÞதுவின் மன்னிக்கும் சிந்தையுடன்
சந்தோஷமாக சமாதானமாக
பந்தியில் பங்கடைவோம் - இறுதி

பக்தரோடே சீயோனிலும்
பிதாவின் இராஜ்ஜிய பந்தியிலும்
வாஞ்சையாய் நாமும் வருகையில்
விரைந்து சேர்ந்து கொள்வோம் - இறுதி