Skip to main content

இதயம் நன்றியுடன் நிரம்பி துதித்திடுவோம் மகிபன் இயேசுவையே


இதயம் நன்றியுடன் நிரம்பி துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே
தினமே துதித்திடுவோம்

சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாதுகாத்தார் துணை நின்றார்
நன்றியோடு பாடுவோம் - இதயம்

தேவ இராஜ்ஜியம் தேடி வந்தால்
தேவ நன்மை தங்கிடும்
துதிசெய்தால் தடை நீங்கும்
தேவ ஆசீர் தங்கிடும் - இதயம்

ஆவி ஆத்மா உடல் யாவும்
பரிசுத்தம் காத்துமே
பரன் பாதம் போற்றி வாழ்த்தி
எந்த நாளும் பணிகுவோம் - இதயம்

வஞ்சியாமல் பொருள் தந்து
தேவ சேவை தாங்குவோம்
அதினாலே நன்மை தங்கும்
என்றும் ஆசிர்வாதமே - இதயம்

கர்த்தர் சமூகம் காத்திருந்து
பெலன் பெற்று எழும்புவோம்
துதி செய்தால் சோர்வு நீங்கும்
கர்த்தர் நாமம் போற்றுவோம் - இதயம்