Skip to main content

இயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம் இயேசுவுக்காய் ஜீவிப்பதே எனக்கு ஆனந்தம்


இயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம்
இயேசுவுக்காய் ஜீவிப்பதே எனக்கு ஆனந்தம்
சரணங்கள்

இன்பம் இன்பம் உள்ளமெல்லாம் இன்பம் கொள்ளுதே
பொங்கி பொங்கி பாத்திரம் நிரம்பி வழியுதே
புரண்டு புரண்டு சமாதானம் நதியாய் பாயுதே
உருண்டு உருண்டு பாவபாரம் ஓடி மறையுதே - இயேசு

கேட்க கேட்க வேதம் விசுவாசம் பெருகுதே
நினைக்க நினைக்க கல்வாரியை அன்பு பெருகுதே
பேச பேச அன்னியபாஷை பக்தி பெருகுதே
பாட பாட பரிசுத்தாவி நிறைவு பெருகுதே - இயேசு

ஜெபிக்க ஜெபிக்க மலைகளும் அசைந்து போகுதே
துதிக்க துதிக்க சத்ரு கோட்டை இடிந்து வீழ்குதே
இயேசு இயேசு என் ரோகம் எல்லாம் தொலையுதே
இயேசு இயேசு ரத்தம் ரத்தம் சுத்தமாக்குதே - இயேசு

சகிக்க சகிக்க பாடுகளை பலன் பெருகுதே
சுமக்க சுமக்க சிலுவைதனை சொர்க்கம் திறக்குதே
கொள்ள கொள்ள ஆத்ம பாரம் மீட்பு பெருகுதே
சொல்ல சொல்ல சுவிசேஷம் அற்புதம் விளங்குதே - இயேசு

ஊற்றும் ஊற்றும் வாக்குத்தத்த பின்மாரி ஊற்றும்
வாரும் வாரும் வல்லமை விளங்கவே வாரும்
தாரும் தாரும் ஆவியின் வரங்களைத் தாரும்
போடும் போடும் பரிசுத்த அக்கினி போடும் - இயேசு