இயேசுவின் பின்னால் நான் செல்வேன் திரும்பிப் பார்க்கமாட்டேன் - (2)
திரும்பிப் பார்க்கமாட்டேன் - (2)
சிலுவையே முன்னால் உலகமே பின்னால் - (2)
இயேசு சிந்திய இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே - என் - (2)
உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறிவிட்டேன்
உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும்
ஒப்புக் கொடுத்துவிட்டேன் - இயேசுவின்
வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ பிரிக்கவே முடியாது - இயேசுவின்
அகிலமெங்கிலும் ஆண்டவர் இயேசு
ஆட்சி செய்திடனும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
சபைகள் பெருகிடனும்
என் சொந்த தேசம் இயேசுவுக்கே
இயேசு தான் வழி என்கிற முழக்கம்
எங்கும் கேட்கனுமே -இயேசுவின்