Skip to main content

இயேசு நேசிக்கின்றார் அவர் அன்பாய் நேசிக்கின்றார்


இயேசு நேசிக்கின்றார்
அவர் அன்பாய் நேசிக்கின்றார்
பாவிநான் என்றாலும் தள்ளிவிடாமலே
பாதுகாக்கின்றார் கிருபை தருகிறார்

அழைத்தேனே நெருக்கத்திலே அன்போடு செவிகொடுத்தீர்
ஆபத்து காலத்திலே அரணான துணையானீர்
ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன்
அரவணைத்தாரே அன்பை அளித்தாரே

மாசற்ற தம் உதிரம் எனக்காக சிலுவைலே
மனதார அளித்தவரை மன நோக செய்தேனே
மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை மாற்றி
அமைத்தாரே மகிழ செய்தாரே