Skip to main content

இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் விசுவாசத்தில் முன் நடப்போம்


இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜா பாதையை செம்மையாக்குவோம் - நம்

சாத்தானின் சதிகளை தகர்த்திடுவோம்
இன் இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்த பார் முழுதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் - நம்

ஆவி, ஆத்துமா, தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் - நம்