இயேசுவே உம்மைப் போல் நானும் மாறிடவே உம் பாதம் என்னையும் அர்ப்பணித்தேன்
உம் பாதம் என்னையும் அர்ப்பணித்தேன்
உமது சத்தியம் கேட்க கேட்க
உம் சாயல் நானும் அடைகிறேன்
உன்னத பெலனால் நிறைந்துமே
உம்மைப் போல் நானும் மாறிடுவேன் - இயேசுவே
தெய்வீக வல்லமை இறங்கிட
திவ்ய குணங்களால் நிறைகிறேன்
எந்தனின் ஜீவியம் முற்றுமாக
இயேசுவைப் போல மாறிடுமே - இயேசுவே
பாதையில் துன்பங்கள் நேர்ந்தாலும்
பாத்திரத்தின் பாங்காய் இருக்கிறீர்
சிலுவை சகித்த உம்மை நோக்கி
சகிப்பேன் பாடுகள் உம்மைப் போல - இயேசுவே
தேவா தம் அன்பினால் நிறைக்கிறீர்
உலகை முற்றும் நான் வெறுக்கிறேன்
ஆவி, ஆத்மா, தேகம், தூய்மையுடன்
கர்த்தரென்றும் சாட்சியாய் வாழ்ந்திடுவேன் - இயேசுவே
என்னைக் கண்டவன் பிதாவைக் காண்பான்
என்று நீர் உரைத்த வாக்கைப் போல
இயேசுவே என்னில் உம்மைக் காண
உம்மைப் போல் வாழ அர்ப்பணித்தேன் - இயேசுவே