Skip to main content

இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே ஜீவனீந்தீரல்லோ அன்பினால்


இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே
ஜீவனீந்தீரல்லோ அன்பினால்
திவ்ய வாக்கு தத்தத் தந்தெம்மை ஸ்திரப்படுத்தி
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
இயேசுவே என்னை நீர் ஆசீர்வதியும்
சௌக்கியமீந்திடும் நான், நம்பி வந்தேனே

அன்பினால் சகேயுவை அழைத்துமே
அன்று இரட்சிப்பளித்திட்டீரே
இன்று யாம் பெறவே உம்மாறிடா சந்தோஷமே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே - இயேசு

ரோகிகளின் ஏறற நல்ல வைத்தியரே
தேகமதில் காயமேற்றீரே
என்னை சுகமாக்க நின் வன் கரத்தை நீட்டியே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே - இயேசு

வாவென்று அழைத்த வல்ல சத்தமே
லாசரை உயிர்ப்பித்ததுவே
என்னை உயிர்பிக்க அவ்வல்ல வாக்குரைத்துமே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே - இயேசு

யாவுமெனக்காய் முடித்த இயேசுவே
யாருண்டு இப்பாரில் உம்மைப் போல்
உம் மகிமை சாயல் இம் மண் சரீரம் பெற்றிட
நின் கிருபையாலே பூரணமாக்கிடும் - இயேசு