Skip to main content

இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் இனி எதுவும் அணுகாது


இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்த தீங்கும் தீண்டாது

நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்றுவிட்டார் - இரத்த

இம்மட்டும் உதவின எபிநேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனைவிட
என் தேவன் பெரியவரே - இரத்த

தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வில் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன் - இரத்த

தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் - என்னை - இரத்த

மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர்
அனைத்து சேர்த்துக் கொண்டீர் - இரத்த