Skip to main content

இயேசுவின் நாமமே - கிறிஸ்தேசுவின் நாமமே வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்


இயேசுவின் நாமமே - கிறிஸ்தேசுவின் நாமமே
வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

மாந்தர் போற்றும் நாமம் - விண்
தூதர் வாழ்த்தும் நாமம்
பூவுலகோர் போற்றும்
மேன்மையான நாமம் - இயேசு

பாவம் போக்கும் நாமம் - தூய
வாழ்வளிக்கும் நாமம்
நித்திய ஜீவன் அருளும்
ஈடில்லாத நாமம் - இயேசு

பேய் நடுங்கும் நாமம் - கடும்
நோய் அகற்றும் நாமம்
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத நாமம் - இயேசு

இனிமை தங்கும் நாமம் - தீய
இன்னல் மாற்றும் நாமம்
இருளின் பயங்கள் நீக்கும்
ஈடில்லாத நாமம் - இயேசு

சாவை வென்ற நாமம் - பாவ
சாபம் போக்கும் நாமம்
சர்வ வல்ல நாமம்
இயேசுவின் நாமமே - இயேசு