Skip to main content

இயேசுவைக் காலையிலே துதி பலி செலுத்தியே தொழுதிடுவோம் -2


இயேசுவைக் காலையிலே துதி பலி
செலுத்தியே தொழுதிடுவோம் -2
கிருபைகள் தங்கிடவே இயேசுவைத்
தேடிடுவோம் -2

வல்லமை தங்கிடுதே
தேவனின் சமூகமதில்
உதடுகள் துதித்திடவே
அதிகாலை வேளை கூப்பிடுவோம் - இயேசுவை

கர்த்தரில் காத்திருந்தால்
புது பெலன் அடைந்திடலாம்
வெளிச்சமே உதித்திடுமே
எந்நாளும் ஜெயமே அடைந்திடுவோம் - இயேசுவை

தேவனின் பாதமதில்
நம்மையே படைத்திடுவோம்
தேவனின் சாயல்தனை
அதிகாலை அடைய நாடிடுவோம் - இயேசுவை