இயேசு மானிடனாய்ப் பிறந்தார் இந்த லோகத்தை மீட்டிடவே
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
மேய்ப்பர்கள் இராவினிலே - தங்கள்
மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே - தோன்றி
தேவனைத் துதித்தனரே - இயேசு
ஆலோசனைக் கர்த்தரே - இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு - சர்வ
வல்லவர் பிறந்தனரே - இயேசு
மாட்டுத்தொழுவத்திலே - பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம் - அவர்
ஏழ்மையின் பாதையிலே - இயேசு
பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளை
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே - வான
சாÞதிரிகள் பணிந்தனரே - இயேசு
அன்னாளும் ஆலயத்தில் - அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே - கூறி
தூயனைப் புகழ்ந்தனளே - இயேசு
யாக்கோபில் ஓர் நட்சத்திரம் - இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே - நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார் - இயேசு