இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரைக் கண்டதில்லை காண்பதுமில்லை
இதுவரைக் கண்டதில்லை காண்பதுமில்லை
பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்-வெறும்
சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் - பூரண
எருசலேம் குமாரிகள் எந்தனை வளைந்தோராய்
உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றால் - பூரண
லோக சுக மேன்மையெல்லாம் எந்தனைக் கவர்ச்சித்தால்
பாவச் சோதனைகளெல்லாம் என்னைச் சோதித்தால் - பூரண
நீர்மேல் காணும் குமிழிபோல மின்னும் ஜடமோகமே
என்மேல் வந்து வேகமாக மோதியடித்தால் - பூரண
தினந்தோறும் உம்மேலுள்ள அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே - பூரண