Skip to main content

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன்


இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

உன்னை நானே தெரிந்து கொண்டேனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒருபோதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் - இஸ்ரவேலே

தாய்மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒரு போதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை - இஸ்ரவேலே

தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போக மாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
மூழ்கி போக மாட்டாய் - இஸ்ரவேலே

எனது கிருபை உனக்குப் போதும்
பலவீனத்திலே என் பெலன் விளங்கும்
பூரணமாக என் பெலன் விளங்கும்
எதற்கும் பயம் வேண்டாம் - இஸ்ரவேலே

துன்ப நேரம் சோர்ந்து விடாதே
ஜீவ கிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு - இஸ்ரவேலே