Skip to main content

இயேசுவே எனக்கிந்த இகமதிலே அசைந்திடாதோர் நம்பிக்கையே


இயேசுவே எனக்கிந்த இகமதிலே
அசைந்திடாதோர் நம்பிக்கையே
சார்ந்திடுவேனே மாறா வாக்கினிலே
சாற்றுவேன் அவர் புகழே
நேசிக்க சிறந்தவர் இயேசு எனக்கு
ஆசைக்குகந்தவரே -2
இன்ப சாரோனின் ரோஜா இவரே - 2

மரணமதின் கொடும் கரத்தினின்றே
கருணையால் என்னை விடுத்தே
அரவணைத்தவர் கரமே எனது
சரணம் தரணியிலே - நேசிக்க

பெருகுதே எந்தன் அகம் தனிலே
கிருபை சாகரம் எனவே
ஏற்றதோர் சமயம் சகாயம் அளித்திடும்
உற்றதோர் கிருபையிதே - நேசிக்க

ஜீவனிலும பெரிதவர் கிருபை
சீயோனைப் போல் உயர்ந்ததுவே
தாழ்மையுள்ளோரை வாழ்விக்கும் கிருபை
சூழ்ந்திடும் நிதம் என்னையே - நேசிக்க

பூரணக் கிருபையை அளித்திடவே
ஆரணர் இயேசு தோன்றிடுவார்
சாலேமின் மீட்புடனே பெலனும் பெற்றிடும நல்
காலமும விரைந்திடுதே - நேசிக்க