Skip to main content

இஸ்ரவேல் என் ஜனமே என்றும் இடறிட வேண்டாம்


இஸ்ரவேல் என் ஜனமே என்றும்
இடறிட வேண்டாம்
ஏகோவா உன் தெய்வமானால்
ஏதும் பயம் வேண்டாம்

ஓங்கும் புயமும் பலத்த கரமும்
உன் பக்கமே யுண்டு
தாங்கும் குருபை தயவு இரக்கம்
தாராளமாயுண்டு - இÞரவேல்

பார்வோன் கைக்கு விடுத்து மீட்ட
பஸ்கா ஆட்டுக்குட்டி
ஆரோன் மோசே என்னும் நல்ல
ஆசாரியர் உண்டு - இஸ்ரவேல்

செங்கடலில் வழி திறந்த
சீயோன் நாயகனே
பங்கமின்றி பாலைவனத்தில்
பராமரித்தாரே - இஸ்ரவேல்

சத்துருக்களை சிதற அடித்த
சர்வ வல்ல தேவன்
யுத்தத்தில் உன் முன்னே சென்று
ஜெயமெடுத்தாரே - இஸ்ரவேல்

பயப்படாதே சிறு மந்தையே
பார் நான் உன் மேய்ப்பன்
தயங்காதே மனம் கலங்காதே உன்
தேவன் தினம் காப்பேன் - இஸ்ரவேல்