இஸ்ரவேலின் சேனைகளின் முன் நடந்த தெய்வமே எங்கள் சேனாதிபதியாக - எங்கள் முன்னே செல்லுமே - இஸ்
எங்கள் சேனாதிபதியாக - எங்கள் முன்னே செல்லுமே - இஸ்
உம்மை நம்பி உம்மை சார்ந்து - உம்மை மகிமைப்படுத்தவே
அடியார் தொடுக்கும் வேலையை நீர் ஆசீர்வதிக்க வேணுமே - இஸ்
ஸ்நானகன் யோவானோடேசு ஸ்நானம் வாங்கும் வேளையில்
வந்தமர்ந்த வான் புறாவே! வாரும் இந்த நேரத்தில் - இஸ்
அன்று நூற்றிருபது பேர் சென்றதோர் மேல் வீட்டினில்
வந்தமர்ந்த அக்கினியே! வாரும் இந்த நேரத்தில் - இஸ்
சமுத்திரத்தை இரண்டாக பிளந்த எங்கள் தெய்வமே
உலர்ந்த தரையை எங்களுக்காய் ஒழுங்கு செய்ய வேணுமே - இஸ்
ஆறு லட்சம் இஸ்ரவேலர் - அப்பம் தண்ணீர் குறைவில்லாமல்
நாற்பதாண்டு வனாந்திரம் நடத்தின எம் தெய்வமே - இஸ்
யோசுவாவின் போர்க்களத்தில் - வீரனாய் முன்னின்றவர்
சந்திர சூர்ய மண்டலங்கள் தரித்து நிற்கச் செய்தவர் - இஸ்
ஏழை எலியாவின் மேலே - வல்லமையாய் நின்றவர்
பாரில் பாகால் கோபுரங்கள் அழித்துப் போடும் தெய்வமே - இஸ்
ஆதிக்கிறிஸ்து சீஷர் முதல் - இன்று வரை பக்தரை
ஆசிர் வதித்து வல்லமையால் ஆளும் எங்கள் தெய்வமே - இஸ்
1
புதிய வானம் புதிய பூமி ஆக்கி ஆள வருவாரே
புதிய எருசலே மீதில் ஏழைகளைச் சேருமே - இஸ்