Skip to main content

இயேசுவின் இரத்தத்தாலும் தேவனின் கிருபையாலும்


இயேசுவின் இரத்தத்தாலும்
தேவனின் கிருபையாலும்
மீக்கப்பட்டோர்கள் ஆனந்தம் பாடி
ஆண்டவருடன் சேருவார்

மேகத்தில் எக்காளமே - இயேசு
வருகையில் தொனித்திடுமே
அன்பருடன் அவர் பக்தர் பலர்
ஆயத்தமாய் வருவார் - இயேசுவின்

அத்தி மரம் துளிர்க்குதே - அந்த
புத்திரர் இஸ்ரவேலர்
பத்திரமாக கூடிச் சேர - வேத
சத்தியம் நிறைவேறுதே - இயேசுவின்

ஜொலிக்கும் நட்சத்திரங்கள் - பல
வீழ்கின்ற நாளிதுவே
பாவத்தை வெறுத்து பயத்தோடே ஜீவித்து
இயேசுவை பின் செல்லுவோம் - இயேசுவின்

தூதனின் கரங்களில் - ஓர்
கோப கலசத்தைப் பார்
ஐயோ என்றோரு தொனி கேட்குதே
ஐங்கண்டங்கள் எங்குமே - இயேசுவின்

காலம் இனி செல்லாதே - கர்த்தர்
இயேசு வருகின்றாரே
ஆவியும் அவர் மணவாட்டியும்
கூவி அழைத்திடுவார் - இயேசுவின்