Skip to main content

இயேசு என் வாழ்வினல் இன்பம் இகமதில் அவரைப் புகழுவேன் (2)


இயேசு என் வாழ்வினல் இன்பம்
இகமதில் அவரைப் புகழுவேன் (2)

பாவங்கள் போக்கிடு நாமம்
பரிசுத்தம் நிறைந்த நல் நாமம்
அகமதிலே அருள் தனையே
அளிக்கும் அன்பு தேவன் - இயேசு

கண்ணீர் துடைத்திடும் கரங்கள்
காயம் ஏற்ற நல் கரங்கள்
கருணை மிகும் கரங்களையே
நீட்டி அழைக்கும் தேவன் - இயேசு

நன்மை செய்திங் கால்கள்
நல்லோரைத் தேடிடுங் கண்கள்
அளவில்லாத ஆசீர்களையே
அளிக்கும் நல்ல தேவன் - இயேசு

இயேச காட்டும் பாதை
இடறில்லா அன்பின் வழியே
ஜீவ வழி என்றவரே
ஜீவன் தந்த தேவன் - இயேசு

சிலுவையில் தொங்கும் மீட்பர்
சிறந்த வாழ்வின் பங்கு
சுதந்திரமே நல்கிடுவார்
சுகமாய் தங்கி வாழ்வேன் - இயேசு