Skip to main content

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே இன்பமதுவே


இயேசு கிறிஸ்துவின் நாமமிதே
இனிமையாமே இன்பமதுவே
ஏழைக்கும் ஆறதலே

நாமம் அதிசயமே தேவதாசரின் புகலிடமே
நானிலந்தனிலே யாவரும் வணங்கிடவே
நாதன் இயேசுவின் நாமமதையே
நன்றியுடன் புகழ்வோம் - இயேசு

அளிப்பேன் யாவையுமே என் நாமத்தில் என்றனரே
அளிக்க வலியவனை வல்லமையுண்டதிலே
களிப்போம் வல்ல நாமமதிலே
கனிந்தே பாடிடுவோம் - இயேசு

நோய்கள் நீக்கிடவும் நவ பாஷைகள் பேசிடவும்
சர்ப்பங்களை எடுக்க சக்தி ஈந்ததுவும்
உத்தமர்கள் போற்றிப் புகழும்
கர்த்தரின் நாமமதே - இயேசு

சாவுக்கேதுவான கொடும் நஞ்சைப் பருகிடினும்
சேதப்படுத்தாதே காக்க வல்லதுவே
நாதன் ஈந்த தைலமெனவே
நமக்காய் ஊற்றுண்டதே - இயேசு

பாவ இருளதனை போக்கும் புண்ணிய நாமமதாய்
பாரில் இறங்கினாரே தேவனின் அன்பதுவே
இயேசு கிறிஸ்து நேசரிவரே
ஆசைக்குகந்தவரே - இயேசு