Skip to main content

இது யூபிலி ஆண்டு இது விடுதலை வருஷம்


இது யூபிலி ஆண்டு
இது விடுதலை வருஷம்
நித்திய மகிழ்ச்சி தலைமேலிருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகும்

நன்மையும் அவர் கிருபையும்
என்றுமே நம்மைத் தொடர்ந்திடுமே
நம் ராஜா யெகோவாயீரே
தேவைகள் யாவையும் சந்திப்பாரே

கட்டுகள் யாவும் நீங்கி விடும்
கண்ணீரை இயேசு துடைத்திடுவார்
சிறையிருப்பை மாற்றிடுவார்
யெகோவா ஷாலோம் என்றும் நம்முடனே

இழந்ததை நாம் பெற்றுக் கொள்வோம்
இந்தியாவை நாம் மீட்டுக் கொள்வோம்
யெகோவா நிசி முன் செல்கின்றார்
யுத்தங்கள் நமக்காய் செய்திடுவார்

ஜெபத்திற்கு பதில் கிடைத்திடும்
சத்துரு நம் காலின் கீழே
ஜெயக் கொடியை பிடித்துக் கொண்டு
ஜெயமாய் வாழ்ந்திட உதவி செய்வார்