Skip to main content

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே.


இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே.

தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே - இதோ

தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே - இதோ

மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே - இதோ

சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
கூறி உயர்ந்திடுவோம் உனையே - இதோ

முன்னோடியாய் இயேசு பரன்
மூலைச் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் - இதோ