இன்ப இயேசுவின் இணையில்லா நாமத்தை புதழ்ந்து இகமதில் பாடிட தருணமிதே
இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் நல் நேசரில்லை
இன்று என்றென்றும் அவர் துதி சாற்றிடுவேன்
நித்தியமான பர்வதமே உந்தனில் நிலைத்திருப்பேனே
நீங்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
நித்தம் நடத்துகிறீர்
என்னையும் உம் ஜனமாய் நினைத்தே - ஈந்தீர்
உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய் - இன்ப
பாவத்தில் வீழ்ந்து மரயையிலே ஆழ்ந்து நான் மாள்கையிலே
பரிந்து தேவ அன்பினைக் காட்டியே
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுமாப் போல்
என் ஆத்துமா உம்பொன் முகம் காணவே
வாஞ்சித்து கதறுதே
வானிலும இந்தப் பூவிலும் நீர் - என்
வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே - இன்ப
சீயோனிலே நீர் சிந்தை வைத்தீர் சேர்த்தொன்றாய் கட்டுதற்காய்
திவ்வியபிஷேகம் தந்தெமை நிறுத்தி
சேர்த்தீரே சுத்தருடன்
சேதம் வராமல் காத்ததினால் - உம்மை
சேவிப்போம் நித்திய நித்தியமாய் - இன்ப
ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்தரிப்போம் அன்பரை உளம் கனிந்தே
அற்புத ஜெயம் ஈந்தீரே
அளவில்லாத ஜீவனை அளித்தே
அல்லேலூயா துதி கன மகிமை -உம்
நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம் - இன்ப