Skip to main content

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்


இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்

இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
கறை திரை அற்ற பரிசுத்தரோடு
ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன்

தூதர்கள் வீணைகளை மீட்டும்போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும்போது
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்

முட் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற் கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன்

என்னுள்ளம் நன்றியாலே நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா

ஆஹா எக்காளம் என்று தொனித்திடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்ந்திடுமோ
அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே